இந்தியா

தெலங்கானா என்கவுன்ட்டர்‌: சசிதரூர், மேனகா காந்தி எதிர்ப்பு

jagadeesh

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

நீதிமன்ற தீர்ப்புக்கு வெளியே இதுபோன்ற தண்டனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். என்ன நடந்தது என்ற விவரங்கள் தெரிவதற்கு முன் கண்டனம் தெரிவிக்க முடியாது எனக் கூறியுள்ள அவர், அதேநேரம் சட்டத்தை மதித்து நடக்கும் சமூகத்தில் நீதித்துறைக்கு மீறிய கொலைகளை ஒப்புக் கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளார். 

பாரதிய ஜனதா எம்பியும், மூத்த தலைவருமான மேனகா காந்தி, இது ஒரு கொடூரமான முன்னுதாரணம் என கண்டித்துள்ளார். அவரவர் விருப்பப்படி மற்றவர்களை கொல்ல முடியாது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியாது, குற்றவாளிகளை நீதிமன்றங்கள்தான் தூக்கிலிட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த என்கவுன்ட்டருக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம், தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவையும் கண்டனம் தெரிவித்துள்ளன.