இந்தியா

சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவா? - சரத்பவார் பதில் 

சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவா? - சரத்பவார் பதில் 

webteam

மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு செய்யப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது குறித்து தகவல் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை விட்டுத்தர பாஜக முன்வராதது ஏற்க முடியாது எனவும் பாஜகவின் பிடிவாதபோக்கே மகாராஷ்டிராவின் இந்த நிலைக்கு காரணம் எனவும் தெரிவித்தார். 

முன்னதாக, மத்திய அமைச்சரவையில் இருந்து கூட்டணியை முறித்துக்கொண்டால் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்திருந்தது. அதன்படி சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.