இந்தியா

முதல்வர் பதவி ஒப்பந்தந்திற்கு பிறகுதான் கூட்டணி அமைத்தோம் - சஞ்சய் ராவத் 

முதல்வர் பதவி ஒப்பந்தந்திற்கு பிறகுதான் கூட்டணி அமைத்தோம் - சஞ்சய் ராவத் 

webteam

முதல்வர் பதவிக்கான காலத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பாஜக - சிவசேனா இடையே தேர்தலுக்கு முன்பாகவே ஒப்பந்தம் போடப்பட்டதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் பதவிக்கான காலத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பாஜக - சிவசேனா இடையே தேர்தலுக்கு முன்பாகவே ஒப்பந்தம் போடப்பட்டதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில், “தேர்தலுக்கு முன்பாக முடிவு செய்யப்பட ஒப்பந்தம் தொடர்பாக மட்டுமே நாங்கள் கலந்தாலோசிக்க உள்ளோம். புதிதாக எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப் போவதில்லை. முதல்வர் பதவியை பகிர்ந்து அளிப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்தே பாஜக - சிவசேனா இடையே கூட்டணி ஏற்பட்டது” என கூறியுள்ளார். குடியரசு தலைவர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறித்து பேசிய போது, “அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. மக்களின் தீர்ப்பை அவமானப்படுத்தவே இதுபோன்று சதி செய்கிறார்கள்” என்றார்.