இந்தியா

சினிமா பாடல்களை பாடி குப்பைகளை அகற்றும் துப்புரவுத் தொ‌ழிலாளி ‌

சினிமா பாடல்களை பாடி குப்பைகளை அகற்றும் துப்புரவுத் தொ‌ழிலாளி ‌

webteam

துப்புரவுத் தொ‌ழிலாளி ‌ஒருவர் தனது வேலையை, சோர்வே ஏற்படாத வண்ணம் மிக உற்சாகமாக மாற்றிக் கொண்டு பணி செய்து வருகிறார்.

எந்த வேலையையும் சுமையாக கருதாமல் செய்தால் பாதி திருப்தி ஏற்பட்டு விடும். ஆனால் பலர் அப்படி செய்வதில்லை. அலுத்துக் கொண்டே செய்வதால் எந்த வேலையிலும் ஒரு ஒழுங்கு இருப்பதில்லை. ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் துப்புரவு பணியாளர் ஒருவர் பாடல்களை பாடியவாறு குப்பைகளை அகற்றி வருவது பலரையும் கவர்ந்துள்ளது. 

மகாதேவ் ஜாதவ் என்ற அந்தத் துப்புரவுத் தொழிலாளி, கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தொழிலி‌ல் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாடல்களை பாடியவாறு குப்பைகளை அகற்றி வருவதாக மகாதேவ் தெரிவிக்கிறார். இதற்காகவே இவர் சொந்த கற்பனையில் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராகவும் சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டும் பாடல்களை எழுதி வீதியில் உரத்தக் குரலில் பாடி வருகிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள மகாதேவ் ஜாதவ் உடன் இணைந்து பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.