இந்தியா

இதுவும் அத்தியாவசியம்தான்; நாப்கின் உற்பத்திக்கு அனுமதி கொடுங்கள் - PAD MAN முருகானந்தம்

webteam

பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் மலிவுவிலை நாப்கின் உற்பத்திப் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் அதனைத் தொடங்க மத்திய அரசு
அனுமதி வழங்க வேண்டும் என PAD MAN முருகானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த முருகானந்தம் உருவாக்கிய இயந்திரத்தைக் கொண்டு பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் குறைந்த விலையில் நாடு
முழுவதும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாளொன்றுக்கு 5 லட்சம் நாப்கின்கள் வரை உற்பத்தியாகி வந்த நிலையில் பொதுமுடக்கத்தால் அந்த பணியும் முடங்கிபோயுள்ளது. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட நாப்கின்கள் பெரும்பாலும் விற்பனையாகிவிட்டதால் வரும் நாட்களில் அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகக்கூடும் என முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், ''நாப்கின்கள் கிடைக்குமா என்று எங்களுக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. இது மிகவும் முக்கியமான
விஷயமும் கூட. ஊரடங்கில் காரணமே மக்களின் ஆரோக்யமாகவும், நலமாகவும் இருக்க வேண்டுமென்பது தான். ஆனால் நாப்கின்
தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கிடைப்பதிலும், தயாரிப்பிலும் தற்போது இடையூறு உள்ளது. நாப்கின்கள் கிடைக்கவில்லை என்றால் பெண்கள் சுகாதாரமற்ற முறைகளை பின்பற்ற வேண்டி வரும். இந்தியா நகரங்களை உள்ளடக்கியது மட்டுமல்ல, இங்கு கிராமங்களும் உண்டு'' என தெரிவித்துள்ளார்.