சிகரெட், மதுவைப் போல் ஜிலேபி மற்றும் சமோசாவை சுகாதார எச்சரிக்கை பட்டியலில் மத்திய சுகாதார அமைச்சகம் சேர்த்துள்ளது.
வட இந்திய மாநிலங்களில் பிரபலமான நொறுவைகளான சமோசா மற்றும் ஜிலேபி விற்கப்படும் இடங்களில் அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் எண்ணெய் குறித்து எச்சரிக்கும் வாசகங்கள் பளிச்சென்று தெரியும் வகையில் இடம் பெற வேண்டும் என்று எய்ம்ஸ் நாக்பூர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2050ஆம் ஆண்டில் சுமார் 50 கோடி இந்தியர்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே சர்க்கரை, எண்ணெய் மற்றும் மாவுச்சத்துள்ள உணவுப் பொருள்களை தவிர்க்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.