இந்தியா

தன்பாலின உறவு குற்றச்செயலா? - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

தன்பாலின உறவு குற்றச்செயலா? - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

webteam

தன்பாலின உறவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

தன்பாலின உறவை குற்றச்செயலாகக் கருதும் சட்டப்பிரிவு 377ன் படி தாங்கள் தண்டிக்கப்படுவோமோ என்ற அச்சத்திலேயே வாழ்வதாக, தன்பாலின மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது, பல்வேறு காலக் கட்டங்களில் சமூக பழக்க வழக்கங்கள் மாறி வருவதாகவும், வாழ்க்கை முறை மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்களிலும் இயல்பாக மாற்றங்கள் வரும் என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். 

அத்துடன் சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று தெரிவித்திருந்த நீதிமன்றம், அதேநேரத்தில் தனிமனித சுதந்தரத்தினை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட உள்ளது.

Read Also -> அபிராமியும் சுந்தரமும் விஜய்யும் இதைக் கொஞ்சம் படியுங்கள் !