இந்தியா

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல்: சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

JustinDurai

உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி 159 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் களம் இறங்குகிறார். சிறையில் உள்ள அசம் கான் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். யோகி ஆதித்யநாத் அமைச்சரவைலியிருந்து ராஜினாமா செய்த அமைச்சர் தரம் சிங் சைனிக்கு நாகுர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ்வின் சித்தப்பாவான ஷிவ்பால் யாதவ் ஜஸ்வந்த் நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இதேபோல பாஜகவிலிருந்து அண்மையில் ராஜினாமா செய்த பிரிஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.