Abu Azmi web
இந்தியா

பாபர் மசூதி இடிப்பு விவகாரம்| மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து வெளியேறிய சமாஜ்வாதி! நடந்தது என்ன?

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் பதிவிட்டதால் மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

PT WEB

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக சிவசேனா கட்சி சார்பில் நாளிதழில் விளம்பரம் கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு..

மஹாராஷ்ட்ராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து உத்தவ் சிவசேனா கட்சி சார்பில் நாளிதழில் விளம்பரம் அளிக்கப்பட்டதை எதிர்த்து இம்முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான கட்சி பிரமுகரும் மேலவை உறுப்பினருமான மிலிந்த் நர்வேகர் மசூதி இடிப்பை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதையும் சமாஜ்வாதி கட்சி கண்டித்துள்ளது.

மஹாராஷ்ட்ர தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி மோசமான தோல்வியை தழுவியுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சியின் இம்முடிவு முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது.

மஹாராஷ்ட்ராவில் சமாஜ்வாதி கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.