இந்தியா

சமாஜ்வாதியின் சைக்கிள் யாருக்கு? தேர்தல் ஆணையம் 13ம் தேதி விசாரணை

சமாஜ்வாதியின் சைக்கிள் யாருக்கு? தேர்தல் ஆணையம் 13ம் தேதி விசாரணை

webteam

உத்தர பிரதேச தேர்தலில் சைக்கிள் சின்னத்தை சமாஜ்வாதி கட்சியின் எந்த பிரிவுக்கு வழங்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கும், அவரது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையில் கட்சித் தலைமையை யார் கைப்பற்றுவது என்பது குறித்து மோதல் நீடித்து வருகிறது. கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்திற்கு சொந்தம் கொண்டாடி இருதரப்பும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

இதனையடுத்து ,சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கொண்டாடி வரும் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோரிடம் டெல்லியில் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ‌முன்னதாக ‌முலாயம் சிங் யாதவும் அகிலேஷ் யாதவும் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினர். இதில் இருவரும் சமரசமாக போவது பற்றி பேசப்பட்டதாக தெரிகிறது. உத்தரப்பிரதேச தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் வரும் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்குள் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது.