இந்தியா

மதுபான தடையால் புடவை விற்பனை அமோகம்

மதுபான தடையால் புடவை விற்பனை அமோகம்

webteam

பீகாரில் மதுபான தடை அமலானதை அடுத்து, கடந்த ஆண்டுகளில் விலை உயர்ந்த புடவைகளின் விற்பனை 17 மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆசிய வளர்ச்சி ஆய்வு அமைப்பு நடத்திய ஆய்வில், மதுபான விற்பனை பீகாரில் முற்றிலும் நிறுத்தப்பட்டதை அடுத்து, தேன் விற்பனை 380 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதே போல் தடை அமலான ஆறு மாதங்களில், சீஸ் (cheese) விற்பனை 200 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. 

மேலும் மதுபானங்களுக்கு செலவிடும் தொகை முழுமையாக சேமிக்கப்படுவதால், பெண்கள் தற்போது விலை உயர்ந்த புடவைகளை கொள்முதல் செய்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.  இதன் மூலம் புடவைகள் வாங்கும் சதவிகிதம் முன்பிருந்த காலத்தை விட தற்போது ஆயிரத்து 751 சதவிகிதமாக (17 மடங்கு) உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விலையுர்ந்த புடவைகளை  மனைவிகள் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.