இந்தியா

சாகித்ய அகாடமி நடத்தும் திருநங்கைகளுக்கான இலக்கிய சந்திப்பு

சாகித்ய அகாடமி நடத்தும் திருநங்கைகளுக்கான இலக்கிய சந்திப்பு

webteam

சாகித்ய அகாடமி அமைப்பு திருநங்கைகளுக்கான முதல் இலக்கிய சந்திப்பை அடுத்த வாரம் நடத்துகிறது.

இந்திய இலக்கிய வளர்ச்சி அமைப்பான சாகித்ய அகாடமி, இந்திய மொழிகளின் இலக்கியம் மற்றும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது. சிறந்த இந்திய படைப்பாளிகளுக்கு, ஒவ்வொரு வருடமும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் விருதுக ளையும் வழங்கி வருகிறது. கூடவே பல்வேறு இலக்கிய சந்திப்புகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் திருநங்கைகளுக்கான முதல் இலக்கிய சந்திப்பை நடத்த சாகித்ய அகாடமி முடிவு செய்திருந்தது. அதன்படி கொல்கத்தாவில் அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை இந்த சந்திப்பு நடக்கிறது. இதில் திருநங்கை படைப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

9மனாபி பந்தியோபத்யாய்)

‘பல திருநங்கை எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த சரியான மேடை கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த சந்திப் பை ஏற்படுத்த முடிவு செய்திருந்தோம். அதன்படி இந்த சந்திப்பு நடக்கிறது. திருநங்கை படைப்பாளிகளுக்கான சந்திப்பாக இருந்தாலும் இதில் அனைவரும் கலந்துகொள்ளலாம்’ என்று சாகித்ய அகாடமியின் செயலாளர் கே.ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த அருணா நாத், துபாதத்தா பிஸ்வாஸ், தேபத்ஜோதி பட்டாச்சார்யா, ரவி மஜூம்தார், சங்கரி மண்டல் உட்பட சிலர் தங்கள் படைப்புகளை வாசிக்க இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வரும் மொழி ஆலோச னை குழு உறுப்பினருமான மனாபி பந்தியோபத்யாய் இந்த சந்திப்புக்குத் தலைமை தாங்குகிறார்.

பள்ளி ஆசிரியையான திருநங்கை சுகந்தா கூறும்போது, ‘திருநங்கை சமூகத்திலும் ஏராளமான திறமையாளர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற மேடை அவர்களுக்கும் தேவையான ஒன்று. அது இப்போது நிறைவேறுகிறது’ என்றார். 

ஆய்வு மாணவரான 25 வயது பிஸ்வாஸ் கூறும்போது, ‘கலைக்கு எந்த பாலினமும் இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் அதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார்.