இந்தியா

காதல் தோல்வியால் தீவிரவாதியான சப்ஜர் அகமது!

காதல் தோல்வியால் தீவிரவாதியான சப்ஜர் அகமது!

webteam

காதல் தோல்விக்கு பின்னரே ஹிஜ்புல் முஹாஜிதீன் படைத்தளபதி சப்ஜர் அஹமது பட் தீவிரவாதியாக மாறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சப்ஜார் அகமது பட் என்பவர் உட்பட 8 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராத்சுனா கிராமத்தை சேர்ந்தவர் சப்ஜர் அஹமது. இவர் தனது 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தார். இதையடுத்து தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவருக்கு, போதை பழக்கம், கொள்ளை, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டார். இதனிடையே, ஒரு பெண்ணை காதலித்த சப்ஜர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் அவர் காதலை நிராகரித்துவிட்டதால், முனமுடைந்த சப்ஜர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தாராம். 

தொடர்ந்து ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த ஆண்டு என்கவுன்டரில் கொல்லப்பட்டதையடுத்து, சப்ஜர் அகமது, ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கமாண்டராக செயல்பட்டதும், சப்ஜரின் தலைக்கு காவல்துறையினர் விலை நிர்ணயித்ததும் குறிப்பிடத்தக்கது.