சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய தமிழகத்திலிருந்து மட்டும் ஐந்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், கனடா, மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் இதுவரை 12 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்ய இணையதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை சுவாமி தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு நிறைவடைந்துள்ளது எனவும், மகர விளக்கு பூஜைக்கான முன் பதிவு ஜனவரி 10 ஆம் தேதி வரை நிறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இனி, ஜனவரி 11 முதல் 19 ஆம் தேதி வரையிலான நாட்களுக்கு மட்டும் இணையவழியில் முன்பதிவு செய்யமுடியும்.