இந்தியா

12 நாட்களில் 46 பேருக்கு கொரோனா: சபரிமலையில் விதிமுறைகளை கடுமையாக்க முடிவு!

12 நாட்களில் 46 பேருக்கு கொரோனா: சபரிமலையில் விதிமுறைகளை கடுமையாக்க முடிவு!

jagadeesh

சபரிமலையில் கொரோனா பரவலை தடுக்க அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விதிமுறைகளை மேலும் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நடை திறக்கப்பட்டு 12 நாட்களில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தரிசனத்திற்கு வந்த ஐயப்ப பக்தர்களும் அடங்குவர். இதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்ட இடங்கள், அங்கே ஏற்பட்ட கவனக்குறைவு குறித்து விவாதிக்கப்பட்டது.

வருங்காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், கொரோனா விதிமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என ஆலோசனைக்குப் பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.