இந்தியா

வருடாந்திர திருவிழா: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

வருடாந்திர திருவிழா: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

webteam

பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும். கருவறை வாயிலில் தங்கத்தகடுகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட கதவுகள் பொருத்தப்பட உள்ளன. பழைய கதவில் பிளவு ஏற்பட்டிருந்ததால் தேக்கு மரத்தால் ஆன புதிய கதவு பொருத்தப்பட்டு, அதில் 4 கிலோ தங்கத்தகடுகள் வேயப்பட்டுள்ளன.

10 நாள் விழாவுக்கு பின் 21 ஆம் தேதி திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய் வார்கள்.