இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி !

jagadeesh

கொரோனாவால் மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயில் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்படுகின்றது.

மலையாள மாதத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரிமலை நடை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 21-ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்பதால் பாதுகாப்பு விதிமுறைகளோடு தினசரி 250 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான முன்பதிவு வெர்ச்சுவல் க்யூ மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மூலம் நடந்து வருகிறது.

பக்தர்களுக்கு கொரோனா "நெகட்டிவ்" சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மணிமலையாறு, பம்பை, மீனச்சல் ஆறுகள், குளங்களில் பக்தர்கள் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. ஐந்து பேருக்கும் மேல் பேட்டை துள்ளல், ஊர்வலம் செல்வது, வாகனங்களில் செல்வது போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் எருமேலி, வடசேரிக்கரா ஆகிய இரண்டு வனப்பாதைகள் வழி மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.