இந்தியா

சபரிமலை அய்யப்பன் கோயில் இன்று திறப்பு.. பலத்த பாதுகாப்பு

சபரிமலை அய்யப்பன் கோயில் இன்று திறப்பு.. பலத்த பாதுகாப்பு

Rasus

சபரிமலை அய்யப்பன் கோயில் சிறப்பு பூஜைக்காக இன்று திறக்கப்படுவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சபரிமலை அய்யப்பன் கோயில் சிறப்பு பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. இதனையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பெண் பக்தர்கள் வரும்போது அசம்பாவிதம், வன்முறை ஏற்பட்டால் அதை தடுப்பதற்காக 2 ஆயிரத்து 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 கமாண்டோ வீரர்களும் 100 பெண் போலீசாரும் அடங்குவர். 50 வயதுக்கு மேற்பட்ட 30 பெண் போலீசார் சன்னிதானம் பகுதியில் நிறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் கோயில் நாளை இரவு 10 மணிக்கு மூடப்படும். சபரிமலைக்கு செல்ல பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால் கடந்த மாதம் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கோயிலுக்குள் நுழைய முயன்ற சுமார் 10 பெண்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த முறையும் அது போல நிகழ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.