உயிரிழந்தவர் கூகுள்
இந்தியா

கேரளா: மின்துறையின் அலட்சியம்? சபரிமலை சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த துயரம்!

உடைந்த கேபிளை ஓராண்டாக அகற்றாத கேரள மின்சாரத்துறை வாரிய ஊழியர்களால், சபரிமலை யாத்திரைக்கு சென்றவருக்கு ஏற்பட்ட சோக முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. என்ன நடந்தது? பார்க்கலாம்...

Jayashree A

உடைந்த கேபிளை ஓராண்டாக அகற்றாத கேரள மின்சாரத்துறை வாரிய ஊழியர்களால், சபரிமலை யாத்திரைக்கு சென்றவருக்கு ஏற்பட்ட சோக முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. என்ன நடந்தது? பார்க்கலாம்...

ஓசூரை சேர்ந்தவர் 55 வயதான நாகராஜா. இவர் தனது குழுவினருடன் சபரிமலை சென்றுவிட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். இவர்கள் வந்த வேனானது கடந்த ஜன 14 அன்று, இரவு 11 மணியளவில் பத்தினம்திட்டா அடுத்துள்ள வடசேரிகரை பகுதியில் இருந்த பாலம் வழியாக சென்றுள்ளது. அப்போது இயற்கை உபாதையைக் கழிக்க நினைத்து அனைவரும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கியுள்ளனர். அப்பொழுது நாகராஜா ஒதுக்குப்புறமாக இருந்த மின்கம்பத்தின் அருகே சிறுநீர் கழித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

நாகராஜா

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேரள மின்சார வாரியம், மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் நாகராஜனை பத்தினம்திட்டா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, சபரிமலை யாத்திரையின் போது, ​​வடசேரிகரை பாலத்தில், தற்காலிக மின் விளக்குகள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் மின்விளக்குகள் மாற்றப்பட்டும், மின்சாரம் வழங்க பயன்படுத்தப்பட்ட கேபிள்கள் அகற்றப்படவில்லை... இதில் உடைந்திருந்த கம்பியில் மின்சாரம் தாக்கியதில்தான் நாகராஜ் உயிரிழந்திருக்கிறார்.

நாகராஜாவின் மகன் மகேந்திரன், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக்கோரி வடசேரிகரை காவல்துறை மற்றும் கேரள மின்சாரத்துறை செயல் பொறியாளரிடம் புகார் அளித்துள்ளார். ‘பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது குற்றம்’ என்றபோதிலும், மின்சார கேபிள் அறுந்த நிலையில் கிடந்ததை ஊழியர்கள் விரைந்து சரிசெய்யாதது கடும் எதிர்ப்பை பெற்றுவருகிறது.