கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. காந்தமலையில் தென்பட்ட ஜோதியைக் கண்டு ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசம் அடைந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜைகள் டிசம்பர் 26ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வழிபட்டுச் சென்றனர்.
இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது. மாலை மறைந்து இருள் சூழ்ந்த நேரத்தில் சபரி மலையின் மீது தென்பட்ட ஜோதியை ஆயிரக்கணக்கானோர் தரிசித்து பரவசப்பட்டனர். இதைத்தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.