நாளை ஆவணி மாதப் பிறப்பை முன்னிட்டு கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு இந்த முறை அனுமதி கிடையாது என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் நடை இன்று (16.08.20) மாலை 5 மணிக்கு ஆவணி மாதப் பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.
ஆகஸ்ட் 17 ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சன்னதியில் நடை திறக்கப்படும். ஆகஸ்ட் 17 முதல் 21 வரை சிறப்பு பூஜைகள் இருக்காது. ஆவணி மாதப் பூஜைகள் ஹரிவராசனம் பாடும் ஊர்வலத்தின் நிறைவுடன் 21 ஆம் தேதி இரவு கோயிலின் நடை சாத்தப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பக்தர்கள் இந்த மாதமும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.