இந்தியா

மகரவிளக்கு பூஜைக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு

EllusamyKarthik

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நாளை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஐயப்பன் கோயிலில் மீண்டும் நாளை முதல் வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

டிசம்பர் 30-ஆம் தேதியும், வரும் ஜனவரி 20-ஆம் தேதியும் பந்தளம் அரண்மனை குடும்பத்தினரின் ஆச்சார வழிபாடுகள் மற்றும் சடங்குகள் இருப்பதால் பிறருக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை. தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசன நிகழ்வு நடைபெற உள்ளது.

மகரவிளக்கு பூஜை காலம் தொடங்கியதையொட்டி ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.