இந்தியா

ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு !

ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு !

jagadeesh

ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

ஓணம் பண்டிகை நாளை மறு நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

கோயிலில் நாளை உத்ராட பூஜை நடைபெற உள்ள நிலையில், நாளை மறு நாள் திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது என்றும் கொரோனா பரவலையொட்டி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக தடை நீடிப்பதாகவும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.