இந்தியா

ஓணம் பண்டிகை: சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு

ஓணம் பண்டிகை: சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு

webteam

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக இன்று (செப்டம்பர் 6-ம் தேதி) மாலை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.

கேரளாவில் செப்டம்பர் 8-ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (செப்டம்பர் 6ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கால சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தினமும் நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கும். அதோடு ஓணம் பண்டிகை நாளான செப்டம்பர் 8ஆம் தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

இதனையடுத்து தமிழ் மாதத்தின் புரட்டாசி மாதம் மற்றும் மலையாள மாதத்தின் கன்னி மாதம் ஆகிய மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மீண்டும் செப்டம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்டு செப்டம்பர் 21-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் பூஜைகள் நடககும்.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.. ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் சிறப்பு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.