இந்தியா

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  நாளை திறப்பு - எத்தனை நாட்கள் திறந்திருக்கும்?

PT

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் கடந்த மாதம் 20ஆம் தேதியுடன் முடிந்த மகரவிளக்கு மற்றும் மண்டலபூஜை சீசனில் முன் எப்போதும் இல்லாத அளவு சுமார் 50 லட்சம் பேர் வழிபாடு செய்தனர். இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன், நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபம் ஏற்றுவார்.


இதில் வெர்ச்சுவல் க்யூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். வரும் 17ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஐந்து நாட்களும் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.