மண்டல பூஜைக்காக சபரிமலைஐயப்பன் கோயில் நடை இன்றுதிறக்கப்படுகிறது. மாலை 5மணியளவில் தந்திரி கண்டரரு மகேஸ்மோகனரு தலைமையில், புதியமேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையைதிறந்து, கற்பூர ஆழியில் தீபம் ஏற்றுவார்.
இதையடுத்து பக்தர்கள்இருமுடியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பூஜைக்காலத்தில் ஆன்லைன்மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட்புக்கிங் முறையில் 20ஆயிரம் பக்தர்கள் என, தினமும் 90ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.
டிசம்பர் 27ஆம் தேதி பிரதான மண்டலபூஜையுடன் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம்தேதி வரை நடை திறக்கப்படுகிறது.