இந்தியா

புதிய வீழ்ச்சியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு

புதிய வீழ்ச்சியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு

webteam

சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றன. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.90ஐ தாண்டியது. டீசல் விலை ரூ.80ஐ தாண்டியது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயும் வேகமாக சரிந்து கொண்டே வந்தது. 70 ரூபாய் என்ற அளவில் இருந்த இந்திய ரூபாய் மதிப்பு நாள்தோறும் 20, 30 பைசா என்ற அளவில் தொடர்ச்சியாக சரிந்தது. இதனால், பெட்ரோல் விலை, இந்திய ரூபாய் மதிப்பு இரண்டும் போட்டி போட்டு 100 ரூபாயை எட்டி வருவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் தான், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 33 பைசா சரிந்து ரூ74.39 ஆக உள்ளது. நேற்று 30 பைசா சரிந்து ரூ74.06 ஆக இருந்தது இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வரைக்கும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ரூபாய்க்குள் இருந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக சரிவை சந்தித்து ரூ74.39ஐ தற்போது எட்டியுள்ளது.