இந்தியா

வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படும் விவகாரம்: மத்திய அரசு ஆலோசனை

வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படும் விவகாரம்: மத்திய அரசு ஆலோசனை

webteam

சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.

உள்துறை செயலாளர் ராஜீவ் குப்தா தலைமையில் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுப்பது தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மின்னணு மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள், தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் போலியான செய்திகள், புரளிகளால் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் நிர்வாகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படுத்தி வருவதாக மத்திய அரசிடம் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

வதந்திகள் பரப்புவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுடன், மதச்சாயம் பூசப்படுவதாகவும் மத்திய அரசு கருதுகிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய ஐந்து பேர் மீதும், இணையதள சேவை வழங்கிய நிறுவனங்கள் மீதும் காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது