இந்தியா

சசிகலாவுக்கு எதிராக புகார் கிளப்பிய டிஐஜி ரூபாவுக்கு ஜனாதிபதி விருது

webteam

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்ததாக புகார் தெவித்த ரூபாவுக்கு கர்நாடக அரசு ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்துள்ளது.

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்ததாகவும் அதற்காக டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு புகார் கூறியிருந்தார். அந்தப் பிரச்னை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. இதுகுறித்து விசாரணைக்கு கர்நாடக முதலவர் சித்தராமையா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து இப்பிரச்னை இன்றும் சர்ச்சையில் அடிப்பட்டு வருகின்றது. 
இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு டி.ஐ.ஜி ரூபாவுக்கு அம்மாநில அரசு ஜனாதிபதி விருது வழங்கியுள்ளது. பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் ரூபாவிற்கு ஜனாதிபதி விருது வழங்கினார்.