இந்தியா

கேரள ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை: முதல்வர், டிஜிபியிடம் விளக்கம் கேட்ட ஆளுநர்

webteam

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடடிக்கைகள் குறித்து, அம்மாநில முதலமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோரை நேரில் அழைத்து, ஆளுநர் சதாசிவம் விளக்கம் கேட்டார்.

திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜேஷ் என்பவர் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு தரப்பினர் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் காவல்துறை இயக்குநர் லோக்நாத் பிகெரா ஆகியோரை தனித்தனியே அழைத்த ஆளுநர் சதாசிவம், ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையில் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனநாயக நாட்டில் அரசியல் கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.