இந்தியா

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பாஜகவுக்காக வேலை செய்யக் கூறவில்லை - மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பாஜகவுக்காக வேலை செய்யக் கூறவில்லை - மோகன் பகவத்

webteam

ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூன்று நாள் கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு (பாஜக)  மட்டுமே வேலை செய்வதாகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறப்படுகிறது, அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை” என்றார். 

“ அமைப்பை பொருத்தவரை எந்த கட்சி தேசிய நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறதோ, அவர்களோடு இணைந்து பணியாற்ற தொண்டர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறோம், அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் அரசியலை விட்டு ஒதுங்கியே நிற்கிறது, ஆனால் தேச நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது” என்று மோகன் பகவத் மேலும் தெரிவித்தார்.