இந்தியா

ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: கேரளாவில் இன்று கடையடைப்பு

ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: கேரளாவில் இன்று கடையடைப்பு

webteam

கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் நேற்றிரவு வெட்டிக் கொல்லப்பட்டார். 34 வயதான ராஜேஷை ஒரு கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொன்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெறிச்செயலில் ராஜேஷின் ஒரு கை துண்டிக்கப்பட்டது.

கொலையாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதாக கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ராஜேஷ் கொலையின் பின்னணியில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கேரளாவில் பாஜகவின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாமல், அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை இடதுசாரி கட்சியினர் கூலிப்படையை ஏவி கொலை செய்வதாக கேரள பாஜக தலைவர் குமணம் ராஜசேகரன் குற்றம்சாட்டியுள்ளார். ராஜேஷ் படுகொலையைக் கண்டித்து கேரளாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.