மோகன் பகவத் ஏ.என்.ஐ.
இந்தியா

75 வயதில் ஓய்வா? - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விளக்கம்!

”ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்கள் உண்டு. ஆனால் மோதல்கள் இல்லை” என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Prakash J

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜகவுடன் முரண்பாடுகள் உள்ளன என்றாலும் மோதல்கள் இல்லை என கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் சுதந்திரமான அமைப்பு, பாஜவுக்காக முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என எவரும் கூறவில்லை என்றும், குடும்ப உறுப்பினர் தலைவராக வருவதற்கு தடையில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பேசிய மோகன் பகவத், “ஆர்எஸ்எஸ் என்பது சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு. இதற்கு துணை அமைப்புகள் கிடையாது. மத்திய, மாநில அரசுகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேர்மையாக உழைக்கின்றனர். நாங்கள் ஆலோசித்து ஒருமித்த முடிவு எடுக்கிறோம். நிர்வாகத்தில் உள்முரண்பாடுகள் கொண்ட அமைப்புகள் உள்ளன. ஆனால், எந்த வகையிலும், எந்த மோதலும் இல்லை. பாஜவுக்காக ஆர்எஸ்எஸ் முடிவு எடுக்கிறது என்பதில் உண்மையில்லை. அனைத்து முடிவுகளும் கூட்டாக எடுக்கப்படுகிறது. அமைப்பை நிர்வகிப்பதில் எனக்கு திறமை உண்டு.

அரசை நடத்துவதில் பாஜவுக்கு திறமை உண்டு. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனைகளை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், எங்களது துறைகளில் முடிவுகளைச் சுதந்திரமாக எடுக்கிறோம். புதிய பாஜ தலைவர் தேர்வு செய்யும் பணி எங்களுடையதாக இருந்தால், இவ்வளவு காலதாமதம் ஆகியிருக்காது. 75 வயதில் நானோ அல்லது வேறு யாரோ ஓய்வு பெற வேண்டும் என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஒரு குடும்ப நபர் ஆர்எஸ்எஸ் தலைவராக வருவதற்கு எந்தத் தடையும் இல்லை, ஆனால் அந்த நபர் தனது முழு நேரத்தையும் அமைப்புக்காக அர்ப்பணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.