தெலுங்கு தேசம் எம்பி காளிசெட்டி அப்பல நாயுடு முகநூல்
இந்தியா

மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 பரிசுத்தொகை!

மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் எம்பி காளிசெட்டி அப்பல நாயுடு அறிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) விஜயநகர எம்.பி. காளிசெட்டி அப்பள நாயுடு, மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால், பெண்களுக்கு ரூ.50,000 அல்லது ஒரு பசுவை வழங்குவதாக அறிவித்திருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தென் மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வட மாநிலங்களில் மட்டுமே இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், மக்கள் தொகை அதிகமாக இருந்தால்தான் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும் என்றும், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் எனவும் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியிருந்தார்.

இதேப்போல தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் குழந்தை பேறு அதிகரிப்பது குறித்து பேசியிருந்தார். இதோடுக்கூட சமீப நாட்களாக மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும்பட்சத்தில் தென் மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எதிர்ப்பு குரல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பேசிய தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) விஜயநகர எம்.பி. காளிசெட்டி, இதுதொடர்பான கருத்தை முன்வைத்திருக்கிறார்.

அதில், ”மூன்றாவதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அந்த பெண், ஆண் குழந்தை பெற்றால் பசு மாட்டு அவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான நிதியுதவியை தனது ஊதியத்தில் இருந்து வழங்கப்படும். “ என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.