ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 22 ஆயிரம் கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளதாக காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. (I.R.D.A.I) கூறியுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டின் தொடக்கத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் கிட்டதட்ட 22 ஆயிரத்து 237 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்தவர்களின் தொடர்பு எண், வங்கிக்கணக்கு, வாரிசுதாரர் உள்ளிட்ட தகவல்களை தொடர்ச்சியாக புதுப்பித்து வர வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
கடன் வழங்கும் நிறுவனங்கள், முகவர்கள் மூலம் காப்பீடு செய்பவர்களின் சரியான விவரங்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு சரியாக இல்லாததால், வாரிசுதாரர்களை கண்டறிவதில் சிக்கல் நீடிப்பது அல்லது அவர் உயிரோடு இல்லை என நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களே இவ்வளவு பெரிய தொகை உரிமை கோரப்படாமல் இருப்பதற்கு காரணம் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.