எருமை எக்ஸ் தளம்
இந்தியா

ராஜஸ்தான்| ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை உயிரிழப்பு!

ராஜஸ்தானில் புஷ்கர் கண்காட்சியில் வைரலான 21 கோடி ரூபாய் மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Prakash J

ராஜஸ்தானில் புஷ்கர் கண்காட்சியில் வைரலான 21 கோடி ரூபாய் மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ராஜஸ்தானில் ஆண்டுதோறும் பிரபல புஷ்கர் கால்நடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இது, இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள், எருமைகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான’அன்மோல்’ என்ற எருமை மாட்டின் விலை, 21 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்து.

மன்னரைப்போல் பராமரிக்கப்படும் எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகள், முந்திரி உள்ளிட்ட உலர் பழங்கள் உணவாக வழங்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்திருந்தார். இது ஏராளமானபார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துவந்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லாபத்தின் பெயரில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எருமைக்கு உடல் உபாதைகள் இருந்த நிலையிலும், அதைப் பருமனாகவும் கொழுப்பாகவும் காட்ட அவர்கள் பல மருந்துகளை செலுத்தி உள்ளனர் என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்