இந்தியா

எலெக்ட்ரிக் வாகன பிரிவுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: டிவிஎஸ் மோட்டார்ஸ்

webteam

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகப்படுத்த ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம். கடந்த ஆண்டும் ரூ.1000 கோடி அளவுக்கு ஒதுக்கீடு செய்தது. நடப்பு ஆண்டு இறுதியில் மாதத்துக்கு 25000 மின்சார வாகனங்களை தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல விரைவில் மாதத்துக்கு 50000 வாகனங்களை தயாரிக்கவும் டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

2025-ம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கணிசமான இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் டிவிஎஸ் மோட்டார்ஸ் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான தொகை முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் வாகனத்துக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனத்தில் கவனம் செலுத்தினாலும், ஐசிஇ வாகனங்களில் எங்களது கவனத்தை இழக்கவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஐசிஇ பிரிவிலும் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய டிவிஎஸ் திட்டமிட்டிருக்கிறது.