மத்திய அமைச்சர் வைஷ்ணவ் fb
இந்தியா

45 பைசா கூடுதலாக செலுத்தினால் போதும்... விபத்து காப்பீட்டை பெறலாம் - மத்திய அமைச்சர் வைஷ்ணவ்!

ரயில் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது 45 பைசா கூடுதலாக செலுத்தினால் விபத்து காப்பீட்டை பெறலாம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ரயில் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது 45 பைசா கூடுதலாக செலுத்தினால் விபத்து காப்பீட்டை பெறலாம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதனை உறுதி செய்யப்பட்ட மற்றும் RAC டிக்கெட் பயணிகள் இதை தேர்வு செய்யலாம். காப்பீட்டு விவரங்கள் பயணிகளுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் இழப்பீடு கோரி 333 பேர் தாக்கல் செய்த கோரிக்கைகளுக்காக 27 கோடியே 22 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

பாலிசி விவரம்:

இதனை அடுத்து பயணிகள் அந்த காப்பீடு நிறுவனம் அனுப்பிய படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் முக்கியமாக நாமினியை நியமன்ம் செய்ய வேண்டும். இதன் பின்னர் பாலிசி ஆவண விவரங்கள் உங்கள் போனுக்கு வந்துவிடும். ரயிலில் எதிர்பாராத விபத்து நேரிட்டால் இந்த இன்சூரன்ஸ் பணத்தை கிளெய்ம் செய்து கொள்ள முடியும் என ஐஆர்சிடிசி இணையதளம்.

என்னென்ன நிகழ்வில் இன்சூரன்ஸ் கிடைக்கும்:

45 பைசா இன்சூரன்ஸை பொறுத்தவரை 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ரயிலில் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ, வன்முறை, தீ விபத்து, திருட்டு என்பன உள்ளிட்ட நிகழ்வுகளின் போதெல்லாம் இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்து கொள்ளலாம்.

எவ்வளவு காப்பீடு கிடைக்கும்:

  • பயணிக்கு இறப்பு நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகை அவரது நாமினிக்கு வழங்கப்பட்டு விடும்.

  • பயணிக்கு நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டாலும் 10 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை கிடைத்துவிடும்.

  • பகுதியளவு உடல் குறைபாடு ஏற்பட்டால் 7,50,000 ரூபாய் காப்பீடு கிடைக்கும் .

  • காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

  • இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக என 10,000 ரூபாய் காப்பீடாக வழங்கப்படும்.