இந்தியா

ரூ.4,807 கோடி கறுப்புப் பணம் பறிமுதல்.... வருமான வரித்துறை

webteam

உயர் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு இதுவரை 4, 807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கறுப்புப் பணத்தில் 112 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாக பிடிபட்டுள்ளதாக டெல்லியில் வருமான வரி உயரதிகாரிகள் சிலர் கூறினர். பிடிபட்ட புதிய ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என்றும், கறுப்புப் பணம் தொடர்பாக இதுவரை 5,184 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நகையாக 97 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு கணக்கில் வராத தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.