கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் ரோகித் சர்தானா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
வட இந்தியாவில் பிரபலமான ஊடக நிறுவனங்கலான ஆஜ் தக் மற்றும் ஜீ நியூசிஸ் ஆகிவற்றில் செய்தியாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திறன்பட பணியாற்றி வந்தவர் ரோகித் சர்தானா. இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து ஜீ நியூஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தக் கொடிய வைரஸ் என் வாழ்கையில் மிகவும் நெருக்கமாக இருந்தவரின் உயிரை பறிக்கும் என்று. இந்த இழப்புக்கு நான் தயாராக இல்லை" என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியும் ரோகித் சர்தானாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.