இந்தியா

ரோகித் வெமுலா தற்கொலைக்கு பல்கலைக்கழகம் காரணமல்ல: விசாரணை அறிக்கை

ரோகித் வெமுலா தற்கொலைக்கு பல்கலைக்கழகம் காரணமல்ல: விசாரணை அறிக்கை

webteam

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதற்கு அவரது தனிப்பட்ட பிரச்னைகளே காரணம் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெமுலா இறப்பு தேசிய அளவில் பெரும் சர்ச்சைகைளுக்கு வித்திட்ட நிலையில் அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ரூபன்வால் நியமிக்கப்பட்டார்.

அந்த விசாரணைக் குழு அறிக்கையில் பல்கலைக்கழக விடுதியிலிருந்து நீக்கப்பட்டதாலோ அல்லது அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் முன்னாள் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தூண்டுதலாலோ இறப்பு நிகழவில்லை என்று குறிப்பிடப்பட்டு்ளளது. மேலும், ரோகித் வெமுலா தலித் அல்ல என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மாணவர் ரோகித் வெமுலா மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் அவர் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.