இந்தியா

'எடுத்த முடிவை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது' - ரோஜர் பெடரர் ஆறுதல் பதிவு!

JustinDurai

தனது டென்னிஸ் வாழ்க்கையின் நினைவுகளில் மூழ்கிய ரோஜர் ஃபெடரர், இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதையடுத்து லண்டனில் நடந்த  தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் ரோஜர் ஃபெடரர்.  கடைசி போட்டி என்பதால் கண்ணீருடன் விடைபெற்றார் அவர். இதுகுறித்து பேசிய ரோஜர் ஃபெடரர், ''எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  இது ஒரு அற்புதமான நாள்; மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன்'' என உணர்ச்சிவசத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது டென்னிஸ் வாழ்க்கையின் நினைவுகளில் மூழ்கிய ரோஜர் ஃபெடரர், இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் அதனை வெளிப்படுத்தியிருந்தார். அந்தப்  பதிவில், ''என்னுடைய கடைசி ஒற்றையர் ஆட்டத்தை இழந்தேன்; எனது கடைசி இரட்டையர் ஆட்டத்தை இழந்தேன்; எனது கடைசி டீம் ஈவென்ட்டை இழந்தேன்; எனது வேலையை இழந்தேன்" என்று சோக ஸ்மைலியுடன் பகிர்ந்திருந்தார். மேலும் அவர், ''நீங்கள் எடுத்த முடிவை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்; உங்களது வாழ்க்கைப் பாதையில் எப்போதும் பல  ஆச்சரியங்கள் நிறைந்திருக்கும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிக்க: 'ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள்' - இங்கிலாந்து ஊடகங்களை வறுத்தெடுத்த ஹர்ஷா போக்லே