சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ரூ.42 கோடி வரி கட்ட வலியுறுத்தி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஸ்கைலைட் ஹாஸ்பிடலிட்டி என்கிற நிறுவனத்தை நடத்தினார். அந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் வியாபாரம் செய்து வந்தது. அதன்மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தை வதேரா கணக்கில் காட்டவில்லை என வருமானவரித்துறை குற்றஞ்சாட்டியது. வருமானத்தை கணக்கில் காட்டாதது மட்டுமின்றி, வரி கட்டவில்லை என்றும் வருமானவரித்துறை தெரிவித்தது.
இதையடுத்து தான் வரி கட்ட தேவையில்லை என வதேரா நீதிமன்றத்தை நாடினார். ஆனால் வதேராவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தான் வருமான வரித்துறை வதேராவிற்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் செலுத்த வேண்டிய வருமான வரி 2010ஆம் ஆண்டிற்கானது என வருமானவரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.