சாலையோரம் சோளம் விற்கும் மூதாட்டி ஒருவர் தனது வியாபாரத்திற்கு சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய உபகரணத்தை பயன்படுத்தி வருகிறார்.
பெங்களூவை சேர்ந்த 80 வயது மூதாட்டி செல்வம்மா. இவர், சாலையோரம் சோளம் விற்கும் வியாபாரத்தை கடந்த 18 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அரசு சாரா என்ஜிஓ அமைப்பானது செல்வம்மாவிற்கு ஒரு பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறது. அதன்மூலம் செல்வம்மாவின் வேலை எளிதாகியுள்ளது. பரிசு வேறொன்றுமில்லை, சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய உபகரணம் தான் அது. அதில், விசிறி மற்றும் எல்இடி விளக்கு ஒன்று உள்ளது. மின்விறியை பயன்படுத்தி தனது சோளத்தை வேக வைக்கும் பணியினை தற்போது எளிமையாக்கியுள்ளார் செல்வம்மா.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ முன்பு கைகளால் இயக்கித்தான் சோளத்தை வேக வைக்க வேண்டியிருந்தது. இதனால் நான் மிகவும் சிரமப்பட்டேன். தற்போது இந்த உபகரணம் மூலம் வேலை எளிதாகியுள்ளது” என தெரிவித்தார்.