இந்தியா

ஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி ! அதிர்ச்சிதரும் தகவல்

ஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி ! அதிர்ச்சிதரும் தகவல்

webteam

உலகில் ஒவ்வொரு 23 நொடிகளுக்கும் ஒருவர் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

தினந்தோறும் சாலை விபத்துகள் செய்திகளை கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருக்கிறோம். பக்கத்து தெருவில் தொடங்கி வெளிநாடுகள் வரை நடக்கும் விபத்து செய்திகள் நம்மை கடந்துகொண்டுதான் இருக்கின்றன. மோசமான சாலைகள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் என விபத்துக்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசமான சாலைகளால் நேரிட்ட விபத்துகளில் 14 ஆயிரத்து 926 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலுக்கு உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் உடல்நல பாதிப்புகளை விட சாலை விபத்துகளால் தான் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2016ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 1.35 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகில் ஒவ்வொரு 23 நொடிகளுக்கும் ஒருவர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது