கர்நாடகாவில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பிய தமிழக பக்தர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கார் ஒன்றில், கர்நாடக மாநிலம் தர்மசாலா கோயிலுக்கு சென்றுள்ளனர். கோயிலில் வழிபாட்டை முடித்துவிட்டு அவர்கள் காரில் வீடு திரும்பியபோது, கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே சாலையோரம் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது மட்டுமல்லாமல் இந்த காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்திற்குள்ளானது. அதில் பயணம் செய்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.