இந்தியா

ரிஷப் பண்டிற்கு வெற்றிகரமாக முடிந்த ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை!

JustinDurai

ரிஷப் பண்டிற்கு இன்று சிறிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று (டிச.30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டின் வலது முழங்கால் மற்றும் வலது மணிக்கட்டில் தசைநார் கிழிவும், நெற்றி, கணுக்கால் மற்றும் முதுகில் சில சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவரது உயிருக்கு எந்த ஆபத்து இல்லை என்றாலும்  காயங்கள் பலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். முதற்கட்ட சிகிச்சைக்கு பின் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் .

இந்நிலையில்  ரிஷப் பண்டிற்கு இன்று சிறிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது நெற்றியில் ஏற்பட்டுள்ள இரண்டு வெட்டு காயங்களுக்கு செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் சர்ஜரி ஆனது நல்லபடியாக நிறைவடைந்தது. தற்போது ரிஷப் பண்டின் உடல்நிலை சீராகவும் நலமாகவும் உள்ளதாக டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர் ஷியாம் சர்மா தெரிவித்துள்ளார். மேல் சிகிச்சைக்காக அவரை டெல்லிக்கு கொண்டு செல்வது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தேவைப்பட்டால் அவரை டெல்லிக்கு மாற்றப்போவதாகவும் ஷியாம் சர்மா கூறி உள்ளார்.

தவற விடாதீர்: ரிஷப் பண்ட்-க்கு உதவியவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கப்போகும் உயரிய கௌரவம்!