இந்தியா

ரூ.251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் கைது !

ரூ.251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் கைது !

ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் ஞாபகம் இருக்கிறதா ?  அதை தயாரித்து தருவதாக கூறிய ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின், நிறுவனர் மோகித் கோயலை போலீஸார் கைது செய்தனர். புது டெல்லியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்தல் குற்றத்திற்காக மோகித் கோயல் உள்பட மூன்று பேரை போலீஸார் புது தில்லி போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் உலகின் மலிவு விலை ஸ்மார்ட்போனை ரூ.251-க்கு அறிமுகம் செய்தது. இதை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதன்படி, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். அவர்களிடமிருந்து தலா ரூ.251 பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் சிறிது நேரத்திலேயே அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.

இதன்பிறகு 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் முன்பதிவு தொடங்கியது. அப்போது, ஒரு மின்னஞ்சல் மற்றும் ஒரு செல்போன் எண்ணிலிருந்து ஒரே ஒரு ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே முன் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளவில்லை. பணம் பெற்றுக்கொள்வது பற்றிய விவரம் வாடிக்கையாளர் பதிவு செய்து கொண்ட இமெயில் மூலம் 48 மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எவ்வித மின்னஞ்சலும் அனுப்பப்படவில்லை.

மேலும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தனது செல்போன்களை அமோசான் மூலம் விற்பனை செய்ய தொடங்கியது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்ததை அடுத்து நிறுவனத்தின் பின்புலம், நிதி ஆதாரம் குறித்து அமலாக்கத்தைதுறை விசாரணையும் நடத்தி வந்தது.