இந்தியா

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி.....அருண் ஜேட்லி

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி.....அருண் ஜேட்லி

webteam

வசதி படைத்தவர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டுக்கு பிந்தைய தொழில் துறைக் கூட்டத்தில் பேசிய அருண் ஜேட்லி, நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், 20 லட்சம் பேர் மட்டுமே ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பதாக தாமாக முன்வந்து தெரிவித்துள்ளதாக கூறினார். 50 லட்ச ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவிகித கூடுதல் வரி விதித்தது சரியானது என்று கூறிய அருண் ஜேட்லி, வரி ஏய்ப்பாளர்களை இனி அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.