இந்தியா

"சுஷாந்துக்கு அளவுக்கு அதிகமான மருந்துகளை கொடுத்தார் ரியா" தந்தையின் புகாரில் அதிர்ச்சி !

"சுஷாந்துக்கு அளவுக்கு அதிகமான மருந்துகளை கொடுத்தார் ரியா" தந்தையின் புகாரில் அதிர்ச்சி !

jagadeesh

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அளவுக்கு அதிகமான மருந்தை ரியா சக்ரபோர்த்தி கொடுத்ததாக, சுஷாந்தின் சிங் தந்தை காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டதாக ஒருபுறமும் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பிரிவினாலும்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்ற பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரியா மீது சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை அளித்துள்ள புகாரில் "சுஷாந்துக்கு மனநல சிகிச்சை அளிப்பதாக கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்ற ரியா அவருக்கு அளவுக்கு அதிகமான மருந்துகளை கொடுத்துள்ளார். மேலும் ஏன் இவ்வளவு மருந்து என பலர் கேட்டதற்கு டெங்கு சிகிச்சைக்காக கொடுக்கப்படுவதாக பொய் கூறியுள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.